Sunday, 14 June 2015

வீதி கூட்டம்-16

14.06.15 இன்று வீதி கலை இலக்கியக்களத்தின் பதினாறாவது கூட்டம்
-------------------------------------------------------------------------------------------------------------
புதுகை ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரியில் மிகச்சிறப்பாய் நிகழ்ந்தது.
அமைப்பாளர்கள் சிவாவும்,தூயனும்  கூட்டத்தை தொய்வுறாமல் நடத்தினார்கள்.
அனைவரையும் சுரேஷ்மான்யா வரவேற்றார்.
சகோ சிவா “நாய்களுக்கான பிரத்யேக சலுகை,கொலை செய்யும் கலை என்றகவிதைகளை வாசித்தார்..அருமையாக.
நாகநாதன் ஹைக்கூ கவிதைகள் வாசித்தார்.சகுனம் சரியில்லை பூனை திரும்பியது என்ற கவிதை அருமை.
சகோ தூயன் பிறமொழி இலக்கியங்கள் அறிமுக நிகழ்வில் கன்னட எழுத்தாளர் சித்தலிங்காவை அறிமுகம் செய்தவிதம் நன்று

42,பட்லர் , என்ற ஆங்கில திரைப்படங்கள் குறித்த தனது பார்வையை கூறி சிறப்பித்தார்சகோ கஸ்தூரிரங்கன் ...
கிப்டட் ஹேண்ட்ஸ் என்ற ஆங்கிலத்திரைப்படம் குறித்து குருநாதசுந்தரம் அவர்கள் கூறினார்.
சகோ ஜெயா ,எஸ்.ராவின் இலைகளை வியக்கும் மரம் என்ற தொகுப்பில் உள்ள கட்டுரைகளை குறித்து சிறப்புடன் பகிர்ந்தார்...அவருடன் தூயன்,சூர்யாசுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு எஸ் .ரா குறித்து பேசினர்.
சகோ மீனாட்சிசுந்தரம் சிகரெட் குறித்த கவிதை வாசித்தார்.
அய்யா முத்து நிலவன் கூட்டத்தை செம்மை படுத்தும் கருத்துகளை கூறி வழி நடத்தினார்.
கூட்டத்தில் இருந்த அனைவரும் பங்கேற்க வீதி கூட்டம் சிறப்புடன் நடந்தது.

Thursday, 23 April 2015

வீதி கலை இலக்கியக்கூட்டம் -15ஆவது கூட்டம்

அன்புடன் வரவேற்கின்றோம்
---------------------------------------------------------
வீதி கலை இலக்கியக்கூட்டம் -15ஆவது கூட்டம்
நாள்:25.04.15
இடம் :ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரி ,புதுகை
காலம் :காலை 10 -1 மணி

தலைமை:முனைவர்  நா.அருள்முருகன்

முன்னிலை:கவிஞர்.நா.முத்துநிலவன்

வரவேற்பு: சோலச்சி

அறிக்கை: ரேவதி

பிறமொழி இலக்கிய அறிமுகம்:மு.தூயன்[கன்னடம்]

கவிதை:வையாபுரி

சிறுகதை விமர்சனம்:துரைக்குமரன்

இலக்கியவாதி அறிமுகம்:அண்டனூர் சுரா

மாணவர் அறிமுகம்:ச.நடராசன்
சிறப்பு அழைப்பாளர்:தேவி நாச்சியப்பன்[குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் புதல்வி]

நாவல் விமர்சனம்:பொன்.க

நிகழ்ச்சி தொகுப்பு:அண்டனூர் சுரா,சோலச்சி

Sunday, 15 March 2015

வீதி மார்ச் மாதக் கூட்டம்

வீதி கலை இலக்கியக் களத்தின் மார்ச் மாதக் கூட்டம் 15/03/2015 அன்று ஆக்ஸ்போர்ட் உணவகக் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்வின் தலைமைப் பொறுப்பை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர். நா. அருள் முருகன் ஏற்று நடத்தினார்.

கவிஞர் நா. முத்துநிலவன் அவர்களின் முன்னிலையில் கூட்டம் துவங்கியது. கவிஞர். மாலதி அவர்கள் வரவேற்பு வழங்க முதல் நிகழ்வாக கவிஞர் பவல்ராஜ் அவர்கள் குறுங்கவிதைகளை வாசித்தார். கவிதையை மட்டும் வாசிக்காமல்  அவை பிறந்த சூழலையும் சுவைபடக் கூறினார். சில சூழல்கள் அவையோரின் விழிகளை நிறைத்தன. நிகழ்வின் சிறப்பான பங்களிப்புகளில் ஒன்றாக இருந்தது இது.

கவிஞர் ரேவதி அவர்கள் சிறுகதைகளை படித்து அவற்றை விவரித்து சிறந்த கதைகளை அறிமுகம் செய்தார். பூனை சுரண்டும் சுவர் அனைவரின் மனதையும் சுரண்டியது.

அடுத்ததாக கடந்த கூட்டத்தின் அறிக்கை வாசிப்பை தொடர்ந்து மாணவர் அறிமுகத்தில் மாணவர் நடராசன் இணையவள் என்கிற கவிதையை வாசிக்க அவையோர் சிறந்த முறையில் கருத்தினை பதிவு செய்தார்கள். தொடர்ந்தது நடராசன் ஏற்புரை.

தொடர்ந்து கஸ்தூரி ரெங்கன் ஜே.ஆர். ஆர். டால்கீன் குறித்த தகவல்களை அவையினருடன் பகிர்ந்துகொண்டார்.

சிறுகதை எழுத்தாளர் திரு.சுரேஷ் மான்யா அவர்கள் அவஸ்தை என்கிற யூ.ஆர். அனந்தமூர்த்தியின் நாவலை விரிவாக அறிமுகம் செய்தார்.

கவிஞர் வைகறை விழாவின் நன்றியுரையைத்தர விழா இனிதே நிறைவடைந்தது.

விழாவிற்கு முதன் முதலாக புதுகை கவி மன்றத்தின் நிறுவனர் திரு. நிலவை பழனியப்பன் வருகை தந்திருந்தார். பல்வேறு பணிகளுக்கிடையே இந்நிகழ்வினில் பங்கேற்று சிறப்பித்தனர் ஆன்றோர்கள்.

விழாவின் ஏற்பாடுகளை திரு.சுரேஷ் மான்யாவும் திரு.கஸ்தூரி ரெங்கனும் செய்திருந்தனர். மிகவும் எளிய முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்ட இக்கூட்டத்தில் சான்றோர் பலரும் வியப்புறும் வண்ணம் பங்கேற்று சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

கருப்பை இதழ் சரவணக்குமார், மூ.தூயன் போன்றோர் முதன் முதலில் கூட்டத்தில் கலந்து கொண்டாலும் தங்களது இருப்பை அழுத்தமாக பதிவு செய்தனர்.

கவிஞர் ரமா ராமநாதன், தீக்கதிர். மதியழகன், முனைவர். துரைக்குமரன், தனது முக்கியப் பணிகளை துறந்து விட்டு வந்த குருநாத சுந்தரம், மரியாதை நிரம்பிய புலவர். கஸ்தூரி நாதன், மாவட்டத்தின் ஆங்கில ஆசிரியர் அந்தோணி, பாண்டியன் புத்தக அகம் திரு.முத்துப்பாண்டியன் உட்பட பலரும் கலந்துகொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர்.

வழக்கம்போலவே கவிஞர் கீதா, கவிஞர் மாலதி மற்றும் கவிஞர் நீலாஅவர்களும் விழாவின் நிகழ்விற்கு உறுதுணையாக இருந்தனர்.  

மாணவர் அறிமுகம்

வீதி மார்ச் மாத கூட்டத்தில் மாணவர் அறிமுகம் பகுதியில் செல்வன். ச. நடராசன் வீதிக்கூட்டதிற்காக எழுதி வாசித்த கவிதை.

இணையவள்

என் ஈரேழு அகவையில் நான்
அவளைக் கண்டேண்
இன்றோ இரண்டு வயதுக் குழந்தை
அவளுடன் கட்டிப் புரள்கிறது
எண்பதும் கூட மயங்கிப் போனது
அவளது அறிவழகில்
இன்றைய நவீன உலகில் எவரும்
அவளை விலக்குவதற்கில்லை
எங்கோவொரு மூலையில் என்ன நடந்தாலும்
நமக்கு சொல்கிற அவள்
எங்கோ யாரோ ஒருவரின் பிறந்தநாளுக்கு
வாழ்த்தத் தூண்டும் அவள்
இங்கே நம் உறவு அன்பிற்கு
ஏங்குவதை மறைக்கிறாள்
அரவிந்தன் உனக்குள் அதிகம் தேடப்பட்டான்
பின் அதிகம் சாடப்பட்டான் - பிறகு
தாயகம் தவறினும் தலைநகரம் பிடித்த
அரவிந்தனை கொண்டாடினாள்
~அவளை~ப் போன்றே அவளையும் புரிந்து
கொள்ளவே முடியவில்லை
அவள் மட்டும் இல்லையெனில கொடிகட்டிப்                                
பறந்திருப்பர் சினிமாக்காரர்கள்
சினிமாக் காரர்களை சின்னாபின்னாவென ஆக்கியவள்
சீரழிப்பாளோ சிடுஹெச்சையும
அவளைக் குறைசொல்லவில்லை பலருக்கு வாழ்வளிப்பவள்
வாழ்வழிக்கவும் செய்கிறாள்
~அவள்~ அவளால் அசிங்கப்படுத்தப் படுகிறாள்
ஆண்களின் துணையொடு
~அவளின்~ ஆயுதம் இருகைகள் ஒன்று
புன்னகை மற்றொன்று அழுகை
ஆனால் அவளுக்கோ மூன்று ஆயுதம்
இரு கை ஒரு மூளை
இதுவரை இவ்வுலகு உயரக் காரணமானவள்
இனி அழியவும் காரணமாகலாம்
கட்டிளங் காளையாய் இருந்த இளைஞனை
கட்டுக்குள் வைத்துவிட்டாள்
அதுபோதாதென்று அவனுக்கு பெயரும் வைத்தாள்
அவள் அடிமை என்று
இளைஞன் சமூகவலைதளத்தில் இருக்கும் நேரத்தைவிட
சமூகத்தில் இருப்பது குறைவு
காணவில்லை இளைஞனை காரணம் அவளின்
விரைவான செயலின் வசீகரம்
பிரம்மனின் படைப்பு பெர்னெர்ஸ் லீயின் படைப்பினுள்
மூழ்கிப் போனதோ
அவள் இருபக்க ஆயுதம் கூராக்கவும்
செய்வாள் மழுக்கவும் செய்வாள்
மனிதன் அவளை பயன்படுத்துவதில் இருக்கிறது
கூராகுதலும் மழுங்குதலும்
அனைத்து விஷயங்களையும் அவள் அறிகினும்
அவள் அறியவேண்டியது பல
என்னதான் அவள் மனிதனை விஞ்சினாலும்
அவளைப் படைத்தது மனிதனே.

ச. நடராசன்
இயந்திரவியல் இரண்டாம் ஆண்டு
சுதர்சன் பொறியியல் கல்லூரி

புதுக்கோட்டை

Monday, 23 February 2015

வீதி கலை இலக்கியக் களத்தின் 13ஆவது கூட்டம்

இன்று வீதி கலை இலக்கியக் களத்தின் 13ஆவது கூட்டம் 
கூட்ட அமைப்பாளர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தார்.அனைவரையும் வரவேற்று சென்ற மாத அறிக்கையை வாசித்தார்.

சிறுகதை வாசித்தல் -பகுதியில் அண்டனூர் சுரா அவர்கள் தினமலரில் பரிசு பெற்ற மஞ்ச அட்ட என்னும் பூம்பூம் மாட்டுக்காரக் குழந்தையின் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக சாதிச்சான்றிதழ் பெற அலைகின்ற நிலையை உணர்த்தும் சிறுகதையை கண்முன் காட்சிகளைக்கொண்டு வந்து நிறுத்துவது போல் வாசித்தார்.அவரின் சிறுகதையை மேலும் சிறப்பாக்க கூறப்பட்ட விமர்சனங்கள் ஒரு சிறுகதையை எப்படியெல்லாம் பார்க்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக,இருந்தது..சிறப்பான முடிப்புடன் கதை இருந்தது என்றும் மேலும் சிறப்புடன் எழுத வாழ்த்துகள் கூறினார்கள்...

கவிதை வாசிப்பில்- செல்லத்துரை அவர்கள் மூன்று கவிதைகள் வாசித்தார்..கவிதையில் அவர் பயன்படுத்திய மழைக்கல்,புழுதிச்சூறாவளி,போன்ற வார்த்தைகள் எடுத்துக்கூறப்பட்டன...

பாதித்த சம்பவத்தில் -மாலதி அவர்கள் அரசுப்பள்ளியில் தான் முதன்முதலாக பணியேற்றபோது நடந்தவற்றை வாழ்வில் மற்க்க முடியாத சம்பவமாகக் கூறினார்....இப்படியும் இருக்கும் அரசுப்பள்ளி என்பது போல இருந்தது..

இலக்கியவாதி அறிமுகத்தில்-புலவர் நாகூரார் அவர்கள் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் படித்த பொழுது ஆசிரியராக இருந்த ச.பாலசுந்தரம் அய்யாவை அறிமுகம் செய்தார்..எல்லோரும் உவமைக்கு இலக்கியத்தைக்கூறுவார்கள் ஆனால் பாலசுந்தரன் அய்யா இலக்கணத்தை உவமையாகக்கூறுவார் என்று கூறி தலைவனை தலைவி சந்திக்கும் பொழுது வெட்கம் ஓடிவிடுமாம் அதற்கு உவமையாக ”உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடுவது” போல் என எடுத்துக்காட்டும் கூறி அவரின் நடுநிலையான தன்மையையும் அருமையாகக்கூறினார்..மிதியடிக்கு தொடுதோல் என்ர புதிய சொல்லை பயன்படுத்துவார் என்றும் கூறினார்.

நன்றி-முத்துநிலவன் அய்யா அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.

கவிஞர் கீதா 

Sunday, 22 February 2015