வீதி கலை இலக்கியக்களம் கூட்டம் -18
நாள் 23.08.15
இன்று வீதி கலைஇலக்கிய கூட்டம் கவிஞர் மு.கீதா தலைமையில் மிகச்சிறப்பாக நிறைவாக நடந்தது.
காலை 9.30 மணி அளவிலிருந்தே அனைவரும் வரத்துவங்கினர்....
முதல் நிகழ்வாக
படித்ததில் பிடித்தது
கவிஞர் முத்துப்பாண்டியன் ,கவிஞர் சோலச்சியும்,கவிஞர் சோலை மாயவன்[பொள்ளாச்சி] மூவரும், தாம் படித்த நூலைப்பற்றி கூறினர்.
வரவேற்பு
கவிஞரும் கூட்ட அமைப்பாளருமான வைகறை சிறப்பு அழைப்பாளர்களான பொள்ளாச்சியிலிருந்து வந்து கலந்து கொண்ட கவிஞர் அம்சப்ரியா , கவிஞர் பூபாலன் மற்றும் கவிஞர் சோலை மாயவன் ஆகியோரை அறிமுகம் செய்து வரவேற்று,கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் சிறப்பாக வரவேற்றார்.
சிறப்பு நிகழ்வு-கவிதைப்போட்டி
தலைப்பு-”தணலில் வளரும் சாதி’
பத்து மணிக்கு அரங்கில் இருந்தவர்களுக்கு தலைவர் மு.கீதா அவர்கள் தலைப்பைக் கூறி, பதினோரு மணிக்குள் எழுதி தந்திடக் கூறினார்.
கவிதை
தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு கவிதைகளை கவிஞர் பவல்ராஜ் வாசித்தார்.அதிலொன்று
” கட்டாயத்தலைக்கவசத்தை
ஆதரிக்கின்றேன்
கடன் தொல்லை”
என சிறப்பான ஏழு கவிதைகளை வாசித்து நிகழ்வை கலகலப்பாக்கினார்...
சிறுகதை
படைப்பாளி பாத்திரங்களோடு ஒன்றி எழுதினால் மட்டுமே அனைவர் மனதிலும் அக்கதை இடம்பிடிக்கும். அப்படிப்பட்ட கதையான
“ பிச்சைப்புகினும்” என்ற மதுவால் கல்வி மறுக்கப்பட்டு அப்பாவால் பிச்சை எடுக்க செல்லும் சிறுமியின் கதையை கவிஞர் சோலச்சி உணர்வோடு படித்த விதம் மிக அருமை.
கட்டுரை
”சிலம்பில் மன்னராட்சி “என்ற தலைப்பில் புலவர் ஜெயா அவர்கள் சிலப்பதிகாரத்தில் மன்னராட்சியினை சிறப்புடன் விளக்கினார்.
பாராட்டிக் கௌரவித்தல்
*”முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே”என்ற நூலிற்காக சென்னை பாரதி இலக்கியப்பேரவையால் விருது பெற்ற கவிஞர் நா.முத்து நிலவன்.
*கணையாழி இதழில் சிறுகதைக்கான போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிஞர் தூயன்.
*இம்மாதத்தில் ”முதல் பரிசு”
என்ற சிறுகதை நூலை வெளியிட்ட கவிஞர் சோலச்சி.
*இரு கவிதை நூல்களை[பனைமரக்காடு,நாட்குறிப்பற்றவனின் ரகசியக்குறிப்புகள்] வெளியிட்ட ஈழபாரதி.
ஆகிய நால்வருக்கும் பொன்னாடைப்போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
கவிஞர் பொன்.க அவர்கள் விருது பெற்ற கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார்.
சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்தல்
* ”சிற்பி விருது” 2014 ஆம் ஆண்டிற்காக பெற்றுள்ள கவிஞர் அம்சப்ரியா அவர்களுக்கும்,
சிறப்புரையாற்றிய கவிஞர் பூபாலன் அவர்களுக்கும் நினைவுப்பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
*கவிஞர் முத்துநிலவன் சிறப்பு விருந்தினர்களுக்குப் பொன்னாடை அணிவித்து,புத்தகம் வழங்கி பாராட்டினார்.
*கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் விருந்தினர்களுக்குப் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
சிறப்புரை-கவிஞர் பூபாலன்.
கவிதையின் தோற்றம் வளர்ச்சி பற்றி விரிவானதொரு ஆய்வு நோக்கில் சிறப்புரையாற்றினார்பூபாலன்.எளிமையான உரை நிகழ்த்தி அனைவர் மனதையும் கவர்ந்த விதம் அருமை.
இலக்கிய ஆளுமை அறிமுகம்-கவிஞர் கஸ்தூரிரங்கன்
எழுத்தாளர் பிரேம்சந்த் பற்றி அவரது கதையைக்கூறி அவரது தன்மையை அழகாக எடுத்துக்கூறினார்....எளியோருக்கான எழுத்தாளராக ,உண்மை சார்ந்து எழுதியதால் அவர் பட்ட சிரமங்கள்,இறுதிவரை வறுமையால் பாதிக்கப்பட்டு வாழ்ந்தது.என மிகச்சிறப்பானதொரு இலக்கிய ஆளுமையை அறிமுகம் செய்த விதம் அருமை.
தமிழ் இலக்கியங்கள் ஆங்கில மொழி,பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் ,தமிழ் மொழியின் வளத்தை உலகோர்க்கு அறிமுகம் செய்ய மொழி பெயர்ப்புக்குழு உருவாக்க வேண்டும் என்றார்...அனைவராலும் அக்கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அவரது வேண்டுகோளை புதுக்கோட்டை தமிழாசிரியத்தலைவர் கும.திருப்பதி அவர்கள் நிச்சயம் செய்வோம் என உறுதி அளித்தார்.
நூல்விமர்சனம்-கவிஞர் செல்வக்குமார்.
கவிஞர் மகேஸ்வரி எழுதிய “விடியல் வெளிச்சம்”என்ற நூலைப்பற்றி தனக்கே உரியப்பாணியில், கவிதைநடையில் விமர்சனம் செய்த விதம் மிகச்சிறப்பு.
ஏற்புரை
ஏற்புரை வழங்கிய எழுத்தாளர் மகேஸ்வரிக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டப்பட்டது.
சிறப்புரை -கவிஞர் அம்சப்ரியா
வீதி என்ற பெயரின் சிறப்பைக்கூறி.மாணவர்களை மதிப்பெண்கள் என்ற வன்முறையால் அவர்களை அடக்கி ஒடுக்கி விடுகிறோம்...வகுப்பறை விட்டு வெளியே உள்ள அவர்களின் உலகம் மிக அழகானது...சொற்கள் ஏற்க படாத போது அது பல்வேறு வழிகளில் வெளிப்படுவதை அழகான எடுத்துக்காட்டுகள் மூலம் கூறிய போது சிறந்த ஆசிரியராக பரிணமித்தார்.
தனது ஊரில் ரேஷனுக்காகப் பல ஆண்டுகள் போராடி இல்லாத நிலை,நூலகத்திற்காக பல்லாண்டுகள் போராடி பெற்றும் இருந்தும் இல்லாத நிலை,கேளாமலே ஊருக்குள் நுழைந்த டாஸ்மார்க்கால் பெறப்படும் வருமானம் தனது ஊருக்கு பயன்படாமல் எங்கே போகின்றது?என்ற வேதனை...இச்சமூக சீர்கேட்டை எல்லாம் பதிவு செய்யக்கூடிய கவிதைகளே மாற்றங்களுக்கு வழி கோலுகின்றன ...என்று சிறப்பானதொரு உரை வழங்கி, வீதி கூட்டத்திற்கு தனது வாழ்த்துகளை வழங்கினார்.,
அவரின் முயற்சியால் உருவாகிக்கொண்டிருக்கும் கவிதை நூலகத்திற்கு நூல்கள் வீதி சார்பாக வழங்கப்பட்டது.
இறுதியாக கவிதைப்போட்டி முடிவு .
கவிஞர் மு.கீதா தனது உரையில் குழந்தைகளே பெரும்பாலான கவிதைகளுக்கு கருவாகின்றனர்.அவர்களின் உலகம் கவலையில்லாதது.பெரியவர்களாகும் போது நாம் நம் குழந்தைமையைத்தொலைத்து கவலைசூழ் உலகில் வாழவேண்டிய நிலை.அக்கவலைகளை போக்கவே இலக்கியம் உதவுகின்றது .
மகிழ்வான சொற்களால் நிறைந்த இந்த அரங்கு அனைவரையும் மகிழ்வில் ஆழ்த்தியுள்ளது...வீதி கூட்டம் சிறப்பானதொரு பாதையில் செல்கின்றது என்பதை இவ்வரங்கு நிரூபிக்கின்றது ..இதற்காக உழைத்த அமைப்பாளர்கள் வைகறைக்கும் ஜெயாவிற்கும் வாழ்த்துகள் கூறி பாராட்டினார்.
போட்டியில் எழுதப்பட்ட கவிதைகளைச் சிறப்பு விருந்தினர்கள் தேர்வு செய்தனர்...தேர்வான 12 கவிதைகளை எழுதியவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
கொம்பன் பாடலாசிரியர் தனிக்கொடி அவர்கள் கவிதை குறித்து சிறப்பாக பேசினார்.
மாணவி தமிழ் ஓவியா இனிய பாடலைப்பாடி அசத்தினார்.
கவிஞர் தங்கம் மூர்த்தி ,தனது ஓயாத பணிகளுக்கிடையேயும் பொள்ளாச்சியிலிருந்து புதுகைக்கு வந்தவர்களைப்பாராட்ட வேண்டி,நிகழ்ச்சிக்கு வந்து பாராட்டி வீதிக்கூட்டத்தை சிறப்பித்தார்.
திருச்சியிலிருந்து வந்து கவிஞர் சுகன்யா ஞானசூரி இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கவிதைப்போட்டியில் பங்கேற்று பரிசு பெற்று இந்நிகழ்விற்கு பெருமை சேர்த்தார்
நன்றியுரை
கவிஞர் ஜெயா தனது நன்றி உரையில் பயணங்கள் ரசனையானது,பண்பாட்டைக்கடத்தக்கூடியது,நேசங்களை உருவாக்கக்கூடியது . இனிமையான பயணம் செய்து பொள்ளாச்சியிலிருந்து வந்து இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி கூறி,கூட்டத்தை நிறைவாக்கிய அனைவருக்கும் தனது மகிழ்ச்சி நிறைந்த நன்றிதனை சமர்பித்தார்.

No comments:
Post a Comment