வீதி கலை இலக்கியக்களம் -கூட்டம் -23
நாள்:24.01.2016
இடம்:ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரி,புதுகை.
படித்ததில் பிடித்தது
கூட்டம் துவங்கும் முன், அனைவரும் ஒன்று சேரும் வரை படித்ததில் பிடித்தது என்ற தலைப்பில் கலந்து கொண்டவர்கள்.
கவிஞர் மீனாட்சி சுந்தரம் -முகில் எழுதியுள்ள ”யூதர்கள்”நூலில் அவரின் சந்தேகங்களை எழுப்பினார்...
திருமிகு தமிழ் ஓவியா
திருமிகு மீனாட்சிசுந்தரம்
திருமிகு தமிழ் இளங்கோ
கவிஞர் குருநாதசுந்தரம்-”மகிழ்நன் கவிதைகள்”சிலவற்றை பகிர்ந்து கொண்டார்
“சொற்களற்ற பாதையில் கடக்கையில்
வழித்துணையாய் வருகின்றன
அவளின் விழிகள்”
கவிஞர் வைகறை:”மகிழ்நன் கவிதைகளில் தனக்கு பிடித்த கவிதையைக்கூறினார்.
மாணவக்கவிஞர் நட்ராஜ்”வைரமுத்து எழுதிய ”கள்ளிக்காட்டு இதிகாசம்/கருவாச்சிக்காவியம் ஆகியவைக்குறித்து அவரின் கவிதையாய்
“கல்லும் படித்தால்
கண்கலங்கும் இல்லையெனில்
அது கல்”
என்றும், மேலும் பூபாலன்,அம்சப்ரியா கவிதைகள் குறித்தும் பேசினார்.
கவிஞர் ரேவதி”முகில் எழுதிய ”ஹிட்லர்,சந்திரபாபு”ஆகிய நூல்கள் குறித்தும்,பாலகுமாரனின் உடையார் நாவல் குறித்தும் பேசினார்.
திருச்சியில் இருந்து வந்து கலந்து கொண்ட வலைப்பதிவர் தமிழ் இளங்கோ ”ஏழைப்படும்பாடு”என்ற சுத்தானந்த பாரதியின் நூல் குறித்து பேசினார்.
மாணவக்கவிஞர் தமிழ் ஓவியா ”இராமையாவின் குடிசை” என்ற ஆவணப்படம் குறித்து பேசினார்.
கவிஞர் கீதா ,கார்த்திகைப்பாண்டியனின் விகடன் பரிசு பெற்ற மொழிபெயர்ப்பு நூல் ”எருது”குறித்து பேசினார்.
கூட்ட நிகழ்வுகள்
வரவேற்புரை:அனைவரையும் இம்மாத கூட்ட அமைப்பாளரான கீதா கவிதை நடையில் வரவேற்றார்.
அஞ்சலி
அண்மையில் மறைந்த மக்கள் கலை இலக்கிய இசையமைப்பாளரான கே.ஏ.குணசேகரன் அவர்களுக்கு வீதி கூட்டம் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாடல்:கவிஞர் .சோலச்சி ,மானமுள்ள தமிழினமே/மதுவால் அழிந்தது தமிழகமே என்ற பாடலைப்பாடினார்.
தலைமை:திருமிகு குருநாதசுந்தரம் தமிழாசிரியர்
கவிதை ஒன்றினை வாசித்து தனது உரையைத்துவங்கினார்...வீதி கூட்டம் துவங்கியதை நினைவு கூர்ந்து ,வீதி சிறப்பான பாதையில் நடைபோடுகின்றது என மகிழ்ந்தார்.
கவிதை
கவிஞர் நிலாபாரதி
வீணா போன வேட்டி என்ற தலைப்பில் சாட்டையடி வார்த்தைகளால் சுழட்டி தாக்கியது அருமை.
”கட்டிக்காப்போமெனும் பெயரில்
உருவிக்கொண்டு[று] விடாதீர்கள்
ஆதிமனிதனின் ஆடையான கோவனத்தை”
என வேட்டிகள் தினம் கொண்டாடுவோரின் அக்கறைச்சாடினார்..
”சடுகுடு” என்ற தலைப்பில்
”டாஸ்மார்க் தமிழகத்தின்
அக்மார்க்”
என தேர்தல் நிகழ்வுகளை படம்பிடித்துக்காட்டினார்..
அனைவரும் கவிதையின் வீரியத்தைப்பாராட்டினர்.
கவிஞர் மீராசெல்வகுமார்.
புகை படிந்த போதி மரங்கள் என்ற கவிதையையும்,கவிதை என்றால் என்ன சிறந்த கவிதை என்ன செய்யும் என்ற கர்ப்பம் யாதெனில் என்ற கவிதையையும் வாசித்து அனைவர் மனதையும் கவிதையால் கட்டிப்போட்டார்.
மாணவ அறிமுகத்தில் சாம்ராஜ் தனது அஹிம்சை கவிதையை சிறப்பாக வாசித்தார்.
சிறுகதை -புதுகை செல்வா
தலைப்பிடப்படாத கதை யென சென்னை வெள்ளத்தில் கண்ட நிகழ்வுகள் மனதில் காட்சிப்படுத்தும் வரிகளால் தனது சிறுகதையை வாசித்த விதம் நன்று.கட்டுமானத்தொழிலாளர்களின் சொற்களைப்பயன்படுத்தியது கதைக்கு வலு சேர்த்தது.
நூல் அறிமுகம்:கவிஞர் துரைக்குமரன்
ராய் மார்க்சம் எழுதி தமிழில் சிரில் அலெக்ஸ் மொழி பெயர்த்த ” உப்பு வேலி “என்ற நூலின் சிறப்பைக்கூறிய போது ,உப்பு அரசியலைப்பற்றி புரிந்து கொள்ள முடிந்தது...சுதந்திரப்போராட்டத்திற்கும்,உப்புக்காய்ச்சும் போராட்டமான தண்டியாத்திரைக்கும் உள்ள தொடர்பை அழகாக எடுத்துரைத்தவிதம் சிறப்பு.நூலை படிக்க வேண்டிய ஆவலைத்தூண்டியது.
புதியவர்கள் அறிமுகம்.
கூட்டத்திற்கு புதிதாக வந்தவர்கள் தகளை அறிமுகம் செய்து கொண்டனர்.
திரைப்படப்பாடலாசிரியர் சங்கத்துணைத்தலைவர் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்
அனுபவம்:
மனித வள பயிற்றுநர்:திருமிகு கிருஷ்ணவரதராஜன்
தனது வாழ்வில்,, தான் தலைநிமிர்ந்து நிற்கும் படி, வெற்றி பெற்ற அனுபவங்களைப்பகிர்ந்து கொண்டார். நம்மீது நாம் கொண்ட உயர்வான எண்ணங்களே நம்மை உயர்வடைய வைக்கும்..என்று தான் அடைந்த வெற்றியை நகைச்சுவையுடன் கலகலப்பான பேச்சினால் அனைவர் மனதையும் கவர்ந்தார் .”வெற்றி தரும் நினைவாற்றல் பயிற்சி”என 50க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை மாணவர்களுக்கு அளித்துள்ளார்.தற்போது இவரும் இவரது மனைவி அனு வரதராஜனும் இணைந்து ,அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்துக்கொண்டுள்ளனர்.அவரது பணி சிறக்க அனைவரும் வாழ்த்துகளுடன் பாராட்டினர்.
இலக்கியவாதி அறிமுகம்.
ஆங்கில ஆசிரியர் கஸ்தூரிரங்கன் ஆங்கில இலக்கியவாதியான ”தாமஸ்ஹார்டி”யை அறிமுகம் செய்த விதம் அருமை...அவரின் துன்பியல் நாவல்களுக்கான காரணத்தை ஆய்ந்து கூறினார்.அறிவியல் சார்ந்து எழுதும் படைப்பாளிகளான சந்தோஷ் நாராயணன்,லெக்ஷ்மிசரவணக்குமார் ஆகியோரின் எழுத்துகளைப்பரிந்துரை செய்தார்.
சிறப்பு விருந்தினர் அறிமுகம்:கவிஞர் நா.முத்துநிலவன்
சிறப்பு விருந்தினரான திருமிகு வெங்கட்நாகராஜ் அவர்களைப்பற்றியும் அவர்களின் வலைத்தளம் குறித்தும் அறிமுகம் செய்ததுடன்,
“ மனுசங்கடா நாங்க மனுசங்கடா” என்றமறைந்தகே.ஏ. குணசேகரன் அவர்கள் இசையமைத்த பாடலைப்பாடினார்.
சிறப்பு விருந்தினர்:திருமிகு வெங்கட்நாகராஜ் தமிழ்வலைப்பதிவர் .தில்லி
venkatnagaraj..blogspotcom என்ற வலைத்தளத்தை 2009 ஆம் ஆண்டு முதல் எழுதிவருகின்றார்.இவரது வலைத்தளம் கண்கவரும் வண்ணப்படங்களுடன் வட நாட்டு மக்களின் வாழ்வியலை நமக்கு அறிமுகம் செய்கின்றது...
20 வயதில் மத்திய பணியின் காரணமாக தலைநகர் தில்லி சென்றதாகவும்,இதுவரை 16 மாநிலங்களுக்கு சென்றுள்ளதாகவும்,மேலடாக்,அருணாச்சலப்பிரதேசத்தின் தவாங் நகரைப்பற்றியும்,பயணங்கள் புத்துணர்வு அளிப்பதையும்,பயணங்களில் தாம் பெற்ற அனுபவங்களையும் அழகாக எடுத்துரைத்தார்.மலை வாழ் மக்களுடனான அவரது அனுபவங்கள் வியப்பையும் ,ஆச்சர்யத்தையும் அளித்தன.இமாசலப்பிரதேச நகரில் அதிகாலை 5 மணிக்கு அவ்வூரின் இருப்பை அறிய முயன்ற நிலையில், யாருமற்ற மலையில் அதிகாலையில் டீக்குடிக்க வருவோருக்காக காத்திருந்த டீக்கடைக்காரரைப் பற்றி கூறிய போது நாங்களும் அவருடன் பயணம் செய்த உணர்வை உண்டாக்கியது..வலைப்பதிவில் என்ன எழுதலாம் என்பதையும் எளிமையாக எடுத்துரைத்தார்..இவரது வருகையால் வீதிக்கூட்டம் பெருமை கொண்டது..
இயற்கை உணவு:கவிஞர் நீலா ஆலங்குடியில் துவங்கி உள்ள இயற்கை உணவகத்திலிருந்து காய்கறி சூப்,நவதானிய சுண்டல்,வாழைப்பூ வடை,வரகரசி பாயாசம் ஆகிய இயற்கை உணவுகளை முத்து நிலவன் அண்ணா வரவழைத்து ....அனைவரின் வயிற்றையும் நிறைத்து விட்டார்...
ஆற்றோட்டமென கூட்ட நிகழ்வுகள் அனைவர் மனதையும் நிறைத்தன என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
நன்றியுரை :கவிஞர் வைகறை
விழாவிற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் ,தனது வார்த்தை மழையால் நன்றி கூறி நனைத்து மகிழ்ந்தார்....
வீதியின் 23 ஆவது கூட்டம் நிறைவுற்றது...
கூட்ட அமைப்பு :கவிஞர் மு.கீதா,கவிஞர் வைகறை.

இன்று காலை முதல் மதியம் 2மணிவரை நடந்த நிகழ்ச்சியை இன்று மாலையே பதிவேற்றிய வேகத்திற்கு என் வணக்கம். இதே வேகத்தோடு அடுத்த மாதத்திற்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ள 25ஆவது (வெள்ளிவிழா?) நிகழ்வுக்கும் திட்டமிட வேண்டுகிறேன். இன்றைய கூட்ட அமைப்பாளர்கள் மு.கீதா, வைகறைக்கு என் பாராட்டுகள்.
ReplyDeleteகலந்து கொள்ள முடியவில்லை என்று வருத்தப்படுகிறேன்...
ReplyDelete