Sunday 15 March 2015

மாணவர் அறிமுகம்

வீதி மார்ச் மாத கூட்டத்தில் மாணவர் அறிமுகம் பகுதியில் செல்வன். ச. நடராசன் வீதிக்கூட்டதிற்காக எழுதி வாசித்த கவிதை.

இணையவள்

என் ஈரேழு அகவையில் நான்
அவளைக் கண்டேண்
இன்றோ இரண்டு வயதுக் குழந்தை
அவளுடன் கட்டிப் புரள்கிறது
எண்பதும் கூட மயங்கிப் போனது
அவளது அறிவழகில்
இன்றைய நவீன உலகில் எவரும்
அவளை விலக்குவதற்கில்லை
எங்கோவொரு மூலையில் என்ன நடந்தாலும்
நமக்கு சொல்கிற அவள்
எங்கோ யாரோ ஒருவரின் பிறந்தநாளுக்கு
வாழ்த்தத் தூண்டும் அவள்
இங்கே நம் உறவு அன்பிற்கு
ஏங்குவதை மறைக்கிறாள்
அரவிந்தன் உனக்குள் அதிகம் தேடப்பட்டான்
பின் அதிகம் சாடப்பட்டான் - பிறகு
தாயகம் தவறினும் தலைநகரம் பிடித்த
அரவிந்தனை கொண்டாடினாள்
~அவளை~ப் போன்றே அவளையும் புரிந்து
கொள்ளவே முடியவில்லை
அவள் மட்டும் இல்லையெனில கொடிகட்டிப்                                
பறந்திருப்பர் சினிமாக்காரர்கள்
சினிமாக் காரர்களை சின்னாபின்னாவென ஆக்கியவள்
சீரழிப்பாளோ சிடுஹெச்சையும
அவளைக் குறைசொல்லவில்லை பலருக்கு வாழ்வளிப்பவள்
வாழ்வழிக்கவும் செய்கிறாள்
~அவள்~ அவளால் அசிங்கப்படுத்தப் படுகிறாள்
ஆண்களின் துணையொடு
~அவளின்~ ஆயுதம் இருகைகள் ஒன்று
புன்னகை மற்றொன்று அழுகை
ஆனால் அவளுக்கோ மூன்று ஆயுதம்
இரு கை ஒரு மூளை
இதுவரை இவ்வுலகு உயரக் காரணமானவள்
இனி அழியவும் காரணமாகலாம்
கட்டிளங் காளையாய் இருந்த இளைஞனை
கட்டுக்குள் வைத்துவிட்டாள்
அதுபோதாதென்று அவனுக்கு பெயரும் வைத்தாள்
அவள் அடிமை என்று
இளைஞன் சமூகவலைதளத்தில் இருக்கும் நேரத்தைவிட
சமூகத்தில் இருப்பது குறைவு
காணவில்லை இளைஞனை காரணம் அவளின்
விரைவான செயலின் வசீகரம்
பிரம்மனின் படைப்பு பெர்னெர்ஸ் லீயின் படைப்பினுள்
மூழ்கிப் போனதோ
அவள் இருபக்க ஆயுதம் கூராக்கவும்
செய்வாள் மழுக்கவும் செய்வாள்
மனிதன் அவளை பயன்படுத்துவதில் இருக்கிறது
கூராகுதலும் மழுங்குதலும்
அனைத்து விஷயங்களையும் அவள் அறிகினும்
அவள் அறியவேண்டியது பல
என்னதான் அவள் மனிதனை விஞ்சினாலும்
அவளைப் படைத்தது மனிதனே.

ச. நடராசன்
இயந்திரவியல் இரண்டாம் ஆண்டு
சுதர்சன் பொறியியல் கல்லூரி

புதுக்கோட்டை

No comments:

Post a Comment