இன்று வீதி கலை இலக்கியக் களத்தின் 13ஆவது கூட்டம்
கூட்ட அமைப்பாளர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தார்.அனைவரையும் வரவேற்று சென்ற மாத அறிக்கையை வாசித்தார்.
சிறுகதை வாசித்தல் -பகுதியில் அண்டனூர் சுரா அவர்கள் தினமலரில் பரிசு பெற்ற மஞ்ச அட்ட என்னும் பூம்பூம் மாட்டுக்காரக் குழந்தையின் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக சாதிச்சான்றிதழ் பெற அலைகின்ற நிலையை உணர்த்தும் சிறுகதையை கண்முன் காட்சிகளைக்கொண்டு வந்து நிறுத்துவது போல் வாசித்தார்.அவரின் சிறுகதையை மேலும் சிறப்பாக்க கூறப்பட்ட விமர்சனங்கள் ஒரு சிறுகதையை எப்படியெல்லாம் பார்க்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக,இருந்தது..சிறப்பான முடிப்புடன் கதை இருந்தது என்றும் மேலும் சிறப்புடன் எழுத வாழ்த்துகள் கூறினார்கள்...
கவிதை வாசிப்பில்- செல்லத்துரை அவர்கள் மூன்று கவிதைகள் வாசித்தார்..கவிதையில் அவர் பயன்படுத்திய மழைக்கல்,புழுதிச்சூறாவளி,போன்ற வார்த்தைகள் எடுத்துக்கூறப்பட்டன...
பாதித்த சம்பவத்தில் -மாலதி அவர்கள் அரசுப்பள்ளியில் தான் முதன்முதலாக பணியேற்றபோது நடந்தவற்றை வாழ்வில் மற்க்க முடியாத சம்பவமாகக் கூறினார்....இப்படியும் இருக்கும் அரசுப்பள்ளி என்பது போல இருந்தது..
இலக்கியவாதி அறிமுகத்தில்-புலவர் நாகூரார் அவர்கள் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் படித்த பொழுது ஆசிரியராக இருந்த ச.பாலசுந்தரம் அய்யாவை அறிமுகம் செய்தார்..எல்லோரும் உவமைக்கு இலக்கியத்தைக்கூறுவார்கள் ஆனால் பாலசுந்தரன் அய்யா இலக்கணத்தை உவமையாகக்கூறுவார் என்று கூறி தலைவனை தலைவி சந்திக்கும் பொழுது வெட்கம் ஓடிவிடுமாம் அதற்கு உவமையாக ”உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடுவது” போல் என எடுத்துக்காட்டும் கூறி அவரின் நடுநிலையான தன்மையையும் அருமையாகக்கூறினார்..மிதியடிக்கு தொடுதோல் என்ர புதிய சொல்லை பயன்படுத்துவார் என்றும் கூறினார்.
நன்றி-முத்துநிலவன் அய்யா அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.
No comments:
Post a Comment